சுஷ்மா எச்சரிக்கை எதிரொலி: அமேசானில் தேசியக்கொடி விளம்பரங்கள் நீக்கம்

சுஷ்மா எச்சரிக்கை எதிரொலி: அமேசானில் தேசியக்கொடி விளம்பரங்கள் நீக்கம்

மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, இந்திய தேசியக்கொடி பதித்த மிதியடி விளம்பரங்களை அமேசான் நிறுவனம் நீக்கி உள்ளது.

இந்திய தேசிய கோடி பதித்த மிதியடி விளம்பரங்கள் அமேசான் இணையதள விளம்பரங்களில் இடம் பெற்றன.

இதற்கு, நாடு முழுவது கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து, தேசியக் கோடி பதித்த விளம்பரத்தை இணைய தளத்தில் இருந்து நீக்காவிடில் அமேசான் நிர்வாகிகளின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அமேஸான் இணையதளத்தின் விற்பனைப் பட்டியலில் இருந்து, இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகள் நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அமெரிக்காவில் இந்து கடவுள்களின் உருவங்கள் பதிக்கப்பட்ட மிதியடிகளை அமேஸான் நிறுவனம் விற்பனை செய்ததற்கு எதிராக இந்தியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

அதைத் தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்வதை அமேஸான் நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media