பெங்களூர் :முறைகேடாக பணம் மாற்றிக்கொடுத்த விவகாரம்! ரிசர்வ் வாங்கி அதிகாரிகள் இருவர் கைது!

December 18, 2016 6:49 am
பெங்களூர் :முறைகேடாக பணம் மாற்றிக்கொடுத்த விவகாரம்! ரிசர்வ் வாங்கி அதிகாரிகள் இருவர் கைது!

ரூ.1.99 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி புதிய 2,000 ஆயிரம் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வழங்கியதாக பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் பணம் எடுக்க வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி நீண்ட வரிசையில் நின்றாலும் போதுமான அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் செயல்படாமலேயே உள்ளன.

நிலைமை இப்படி இருக்க பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கர்நாடக அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கின.

ரிசர்வ் வாங்கி அதிகாரிகள் இருவர் முறைகேடாக இவர்களுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிபிஐ
விசாரணை மேற்கொண்டுள்ளது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media