BSF வீரரின் புகார் வீடியோவை அடுத்து,உயரதிகாரிகளின் நெருக்கடி யால் பிளம்பர் வேலைக்கு மாற்றப்பட்ட வீரர்

January 12, 2017 9:41 am
BSF வீரரின் புகார் வீடியோவை அடுத்து,உயரதிகாரிகளின்  நெருக்கடி யால் பிளம்பர் வேலைக்கு மாற்றப்பட்ட வீரர்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் பாதுகாப்பு வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்க செல்வதாகவும் குற்றம்சாட்டிய வீடியோ பதிவிட்டிருந்தார் இதனை அடுத்து வீரரின் புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ரேஷன் பொருட்களை பொதுமக்களிடம் பாதிவிலைக்கு ராணுவ அதிகாரிகள் விற்பதாக எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித் திருந்தனர்.

இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்களின் நிலையையும், ராணுவ முகாமில் நடக்கும் ஊழல் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்ட வீரர் தேஜ் பகதூர் யாதவுக்கு உயரதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் அவர் வீடியோ மூலம் ராணுவ வீரர்களின் அவலங்களை தெரிவித்ததால், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பணியாற்றி வந்த வீரர் தேஜ்பகதூர், எல்லைப்பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குடிநீர் குழாய் சீரமைக்கும் பிளம்பர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை நிர்வாகம் தரப்பில் கூறும்போது, வீரர் தேஜ்பகதூர் மதுபோதைக்கு அடிமையானவர். மனநலம் பாதிக்கப்பட்டவர். பணியில் நேர்மையற்றவராக உள்ளார் என தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளது.

இது தொடர்பாக தேஜ்பகதூர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘எனது எல்லை பணியை இழந்ததற்காக நான் கவலைப்படவில்லை, இந்த போராட்டம் மூலம் வீரர்களுக்கு பயன் கிடைத்தால் அதுவே போதும்’’ என்றார்.

https://youtu.be/8M399esXTOY

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media