சீனப் பட்டாசுகளை புறக்கணிப்பதால் இந்தியாவிற்கு தான் பாதிப்பு என்று சீன தூதர் எச்சரிக்கை !

October 27, 2016 12:37 pm
சீனப் பட்டாசுகளை புறக்கணிப்பதால் இந்தியாவிற்கு தான் பாதிப்பு என்று சீன தூதர் எச்சரிக்கை !

இந்தியா : பாகிஸ்தானுக்கு  ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தீபாவளிக்கு இந்தியாவில் சீனா பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டும் என நாடு முழுவதும் பலதரப்பினர் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்தனர். நம் நாட்டில் தயாரிக்கும் பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ள சீன தூதரக செய்தித்தொடர்பாளர் ஜுயுயி லியன், ”சீன பொருட்களை புறக்கணிப்பதால் சீனாவுக்கு பாதிப்பில்லை. மாறாக பாதிக்கப்படப்போவது இந்திய வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் தான். மேலும் “Boycott Chinese Goods” பிரசாரம் சீனா- இந்தியா இடையேயுள்ள உறவை வலுவிழக்க செய்துவிடும். சீன முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் குறைந்துவிடும்”, என எச்சரித்துள்ளார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media