திருப்பதி ஏழுமலையானை ஏமாற்றும் பக்தர்கள்..,

January 7, 2017 11:49 am
திருப்பதி ஏழுமலையானை ஏமாற்றும் பக்தர்கள்..,

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, பக்தர்களில் பலர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திருப்பதி உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

செல்லாது என அறிவிக்கப் பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள கொடுக்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது.

இனிமேல்,பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு சென்று தங்கள் கையிருப்பில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கான நிபந்தனையும் கூடவே அறிவிக்கப்பட்டது.

இதனால், பெரும்பாலானோர் பழைய பணத்தை கோயில் உண்டியல்களில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல்களில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியிலிருந்து, தற்போது வரை ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக வந்துள்ளது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

செல்லாத பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்துவது இறைவனை ஏமாற்றும் செயல் அல்லவா? என்றும் சிலர் வருந்துகின்றனர்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media