முகநூலில் தீபவாளி என்ற தலைப்பு முதலிடம் ..!

முகநூலில் தீபவாளி என்ற தலைப்பு  முதலிடம் ..!

முகநூல் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் சுமார் 166 மில்லியன் மக்கள், முகநூலை பயன்படுத்துகிறார்கள்.இதில் 159 மில்லியன் மக்கள், செல்போனில் முகநூலை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ஒரு நாளில் மட்டும் 85 மில்லியன் பேர் முகநூலை பயன்படுத்துகின்றனர். இதில் 81 மில்லியன் பேர் செல்போன் மூலம் முகநூலை பயன்படுத்துகின்றனர்.

ஆண்டுதோறும் முகநூல் நிறுவனம், அந்த ஆண்டில் அதிகமாக முகநூலில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் சார்ந்த தகவல்களை தொகுத்து, வருடாந்திர அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டில் அதிகமாக விவாதிக்கபட்ட தலைப்புகளை முகநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் தீபவாளி என்ற தலைப்பு அதிகளவில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிரிக்கெட், உரி தாக்குதல், டோனி திரைப்படம், ஹார்டுவெல், பிரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ்,போக்கிமான் கோ, பதான்கோட் மற்றும் ஐபோன் செவன் உள்ளிட்ட தலைப்புகள் அதிகளவில் விவாதிக்கபட்டிருக்கின்றன.

இதுவே சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில், முதலில்,அமெரிக்க அதிபர் தேர்தலும்,இரண்டாவதாக பிரேசில் அரசியலும், மூன்றாவதாக போக்கிமான் கோவும் இடம் பெற்றுள்ளது.

தற்போது முகநூல் நிறுவனம் முகநூலில்,“Your Year in Review” என்ற புதிய ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளனர். அது இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Top 10 most talked about topics from India in 2016 on Facebook

1. Diwali
2. Cricket
3. Uri attacks and surgical strikes
4. Mahendra Singh Dhoni (movie)
5. Hardwell (India Tour)
6. Priyanka Chopra
7. Rio Olympics
8. Pokemon Go
9. Pathankot
10. iPhone 7 launch

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media