காசில்லாத வணிகத்திற்கு மாறப்போகும் முதல் இந்திய மாநிலம் கோவா!

November 28, 2016 11:25 am
காசில்லாத வணிகத்திற்கு மாறப்போகும்  முதல் இந்திய மாநிலம் கோவா!

இந்தியாவிலேயே பணமில்லாத முதல் மாநிலமாக கோவா மாறப்போகிறது. பொது மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து செல்போன் மூலமாக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவாவில் வசிக்கும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்க கைகளில் ரொக்கமாக பணங்களை கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. செல்போன் மூலமாகவே இனி அனைத்து பணப் பரிமாற்றங்களை செய்து கொள்ளலாம்.செல்போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும் பொருட்களுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர் ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.

இந்த சேவையை ஸ்மார்ட்போனில் மட்டுமல்ல சாதாரண மொபைல் போனிலும் பயன்படுத்தலாம். சாதாரண மொபைல் போனில் இருந்து *99# என்ற எண்ணிற்கு டயல் செய்து அதில் கூறப்படும் வழிமுறைகளை பின்பற்றி பணம் பரிமாற்றங்களை செய்துகொள்ளலாம்.சிறு வணிகர்கள், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை என்றாலும் இந்த முறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கான பணம் அவரவர் வங்கிக்கணக்கிற்கு வந்து விடும்.

இந்த சேவை குறித்து கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் கூறுகையில், மொபைல் போனை பயன்படுத்தி பணபரிவர்த்தனை செய்து கொள்வது குறித்த விழிப்புணர்வு சிறு வணிகர்கள், கடைக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும் முறையும் இருக்கும்.பணமில்லா பரிவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media