சுங்க சாவடிகளில் திடீர் ராணுவம் குவிப்பு: மே.வங்கத்தில் பெரும் பதற்றம்!

சுங்க சாவடிகளில் திடீர் ராணுவம் குவிப்பு: மே.வங்கத்தில் பெரும் பதற்றம்!

மேற்கு வங்கம் : நேற்று காலை முதலே மேற்கு வங்க மாநிலத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வந்தனர்.இது பற்றிய முன் அறிவிப்பு எதுவும் மாநில அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் கொதிப்படைந்த அம்மாநில முதல்வர் ‘ராணுவம் வெளியேறும் வரை மாநில தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேற மாட்டேன்’ என்று தலைமைச் செயலகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் மம்தா பானர்ஜி.

தலைமைச் செயலகத்துக்கு வெளியே ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாலும், அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரள்வதாலும் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மிகக் கடுமையாக எதிர்க்கும் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் பலவும் ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஓரளவு அமைதியாகி விட்டபோதிலும் மோடிக்கு எதிராக அன்றாடம் அரசியல் முன்னெடுப்புகளை மம்தா பானர்ஜி செய்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷயம் மாநில அரசுக்கு தெரியாமல் நடைபெற்றுள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம் என்று மம்தா மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மம்தா உள்ளிருந்தே ட்விட்டரில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டுவந்த அவர், “பால்சிட் மற்றும் தங்குனி ஆகிய சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசை  சாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media