நளினி – பிரியங்கா காந்தி சந்திப்பில் நடந்தது என்ன? உண்மைகள் தொிந்து கடும் கோபமான பிரியங்கா!

November 24, 2016 7:04 am
நளினி – பிரியங்கா காந்தி சந்திப்பில் நடந்தது என்ன? உண்மைகள் தொிந்து கடும் கோபமான பிரியங்கா!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, “மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்காவின் சந்திப்பும்” என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார்.

வேலூர் சிறையில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் பிரியங்கா காந்தி தம்மை சந்தித்த போது நடந்தது என்ன என்பது குறித்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தம்முடைய சுயசரிதை புத்தகத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அது 19.3.2008 திங்கள் கிழமை” என்று அந்த கதையை விவரிக்கும் நளினி, பிரியங்கா காந்தி வந்தபோது, சிறையில் இருந்த சூழல் தனக்கு அச்சமூட்டக்கூடியதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

“ஏன் அப்படி செய்தீர்கள்?” என்று பிரியங்கா காந்தி கேட்டபோது, தான் எதுவுமே செய்யவில்லை என்று விளக்கியதாகவும், அதற்கு வலு சேர்க்கும்விதமாக, இராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள், நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்ற பலவற்றையும் விளக்கியதாக கூறியிருக்கிறார்.

“நீயாக வாக்குமூலம் ஏதும் தரவில்லையா?” என்று பிரியங்கா காந்தி கேட்டபோது, “தொடர்ந்து என்னை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள். மனச்சோர்வும், உடல் சோர்வும், அதிகமாகியிருந்தது. குளுக்கோஸ் வேறு ஏற்றியிருந்தார்கள். கட்டக்கடைசியாக என் துணி மீது கைவைத்துவிட்டார் அந்த அதிகாரி. அதற்கு மேலும் ‘வாக்குமூலம் தர முடியாது’ என போராடிக் கொண்டிருக்க முடியாமல் சரண்டராகிதான் அவர்கள் விருப்பப்படி வாக்குமூலத்தில் கையொப்பமிட்டேன்.” என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற விதம், நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் போன்ற பலவற்றை பற்றி பிரியங்கா காந்தியிடம் விளக்கியதாக கூறியுள்ள நளினி, இந்த சந்திப்பு சுமார் 85 நிமிடங்கள் வரை நடைபெற்றதாகவும், 50 நிமிடங்கள் வரை தன்னுடைய விளக்கங்கள் மட்டுமே இருந்ததாகவும் கூறியுள்ளார்.

“இந்த வழக்கின் விசாரணை ஒட்டு மொத்தமாக தவறு என்று நான் சொன்ன உண்மையை அவரது புண்பட்ட மனசு ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அந்த கோபம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்த நான் அமைதியானேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு நடந்து சில நாட்கள் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு ஊடகத்தில் வந்த செய்திகள் மிக மோசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் பல நாட்கள் நிம்மதி இழந்து தவித்ததாகவும் கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற நூல், இன்று மாலை 4.30 மணிக்கு வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media