ஜல்லிக்கட்டுக்காக கொந்தளிக்கும் தமிழகம்! ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த ஓ.பி.எஸ்!

January 12, 2017 11:05 am
ஜல்லிக்கட்டுக்காக கொந்தளிக்கும் தமிழகம்! ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த ஓ.பி.எஸ்!

முதலமைச்சர் ஓ.பி.எஸ். எளிமையானவர். உண்மையான மக்கள் முதல்வர். சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சு நடத்தச் சென்றுள்ளார்.

நிச்சயம் வரவேற்கப் பட வேண்டிய நடவடிக்கை தான். ஆனால் அவர் தற்போது இதனை ஏன் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டை இத்தோடு மறந்துவிடுங்கள் என்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும், மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கூறி விட்டன. நடத்தியே தீருவும் என தமிழர்கள் ஜாதி, மத பேதமில்லாமல் அறிவித்து விட்டனர். பிரச்சனையை திறமையாக நிர்வகிக்க வேண்டிய நேரத்தில் ஓ.பி.எஸ். ஆந்திரா சென்றது தான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெரிய கோட்டை சின்னதாக்க, அதற்கு பக்கத்தில் மற்றொரு பெரிய கோடு வரைந்தால் போதும். தமிழக முதலமைச்சர்கள் இதுவரை குடிநீர் பிரச்சனை தொடர்பாக ஆந்திரா சென்று ஆந்திர முதலமைச்சரை பார்த்தது இல்லை. ஆனால் முதல்முறையாக ஓ.பி.எஸ். அங்கு சென்றுள்ளதால், இது ஊடகங்களில் பெரிய செய்தியாகி, ஜல்லிகட்டின் வீரியம் குறையும் என எதிர்பார்க்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடிநீர் பிரச்சனை என்பது நிச்சயம் ஜல்லிகட்டை விட பெரிய பிரச்சனை தான். ஆனால் இத்தனை நாட்களாக சும்மா இருந்த தமிழக அரசு இப்போது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள், அப்பல்லோ முன்பு தவம் கிடந்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள் இதுபற்றியெல்லாம் ஏன் கவலைப்படவில்லை எளிமையான ஒரு கேள்வி தமிழகம் இன்று யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது!

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media