உள்நாட்டு விமான சேவை வரிகள் உயர்வு !

November 11, 2016 10:13 am
உள்நாட்டு விமான சேவை வரிகள் உயர்வு !

புதுடில்லி : உள்நாட்டு விமான சேவை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக விமான போக்குவரத்து துறை செயலாளர் கர்மா பல்ஜோர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில். மண்டலங்களை இணைக்கும் 1000 கி.மீ., வரையிலான உள்நாட்டு விமான சேவை வரி ரூ.7500 உயர்த்தப்பட உள்ளது. 1000 முதல் 1500 கி.மீ., வரையிலான விமானங்களுக்கு ரூ.8000 சேவை வரி விதிக்கப்பட உள்ளது. 1500 கி.மீ.,க்கு மேற்பட்ட பயணம் மேற்கொள்ளும் விமானங்களுக்கு சேவை வரி ரூ.8500 விதிக்கப்பட உள்ளது.

இந்த விமான சேவை வரி உயர்வின் மூலம் ரூ.400 கோடி வருவாய் கிடைக்கும் என அரசு நம்புகிறது. இந்த வரி உயர்வு பிராந்திய விமான போக்குவரத்தின் தரத்தை மேலும் உயர்த்த பயன்படுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media