பாட்னாவில் ராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு:3 வீரர்கள் பலி

January 12, 2017 11:33 am
பாட்னாவில் ராணுவ  வீரர் மீது துப்பாக்கிச்சூடு:3 வீரர்கள் பலி

புதுடெல்லி, பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 120 கி.மீட்டர் தொலைவில் உள்ள அவுரங்கபாத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த வீரர் சக வீரர் மீது தீடிரென்று துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே மூன்று வீரர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவுரங்கபாத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வந்துள்ளது. நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய வீரர் உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் பல்வீர் சிங் ஆவார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரு வீரர்களில் தலைமைக்காவலர் அந்தஸ்தில் ஒருவரும், மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலும் உள்ளவர்கள் ஆவார். சக வீரர்களை துப்பாக்கியால் சுட்ட பல்வீர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாதம் யோகா பயிற்சியை முடித்துவிட்டு அண்மையில் தான் பணிக்கு பல்வீர் சிங் திரும்பினார் என்றும் விடுப்பு வழங்குவது தொடர்பான தகராறில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விசாரணை நடத்த மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media