நாளைய ராசிபலன்..,

நாளைய ராசிபலன்..,

நாள் :- 07, ஜனவரி -2017

துர்முகி வருடம்மார்கழி-23, சனிக்கிழமை
திதி: வளர்பிறை நவமி அதிகாலை: 06:30 மணி வரை பிறகு தசமி அதன்பின் இரவு: 04:13 மணிவரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : அசுவினி காலை: 10:58 மணி வரை பிறகு பரணி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை: 07:30-09:00 பகல்: 12:00 – 12:30
ராகு காலம்: காலை 09:00-10:30
எமகண்டம்: பகல் 01:30 – 03:00
குளிகை: காலை: 06:00- 07:30
சூலம் : கிழக்கு – பரிகாரம்: தயிர்
சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை

மேஷம்:
நன்மைகள் நாடிவரும் நல்லநாளாக இருக்கும். ராசியில்லாத வீட்டில் குடியிருப்பதாக கருதி திணரும் தம்பதியர் புதுவீடு மாறலாம். பிள்ளைகளோடு வெளியிடங்களுக்கு சென்றுவருவது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். பழையகடன்கள் வசூல் ஆகும்.

ரிஷபம்:
சாந்தமாக இருந்துகொண்டு சாதிக்கும் நாளாக இருக்கும். வியாபாரிகள் இவ்வளவு நாட்களாக விற்கத்தடுமாறிய பொருட்ளை இன்று விற்று காசாக்குவார்கள். மனைவியின் மனம் நோகாமல் நடந்து கொள்வீர்கள்.

மிதுனம்:
வேலைகளில் ஆர்வமுடன் ஈடுபடும் நாளாக இருக்கும். சம்பள பாக்கிகளை வசூலிக்க இன்றும் விடுமுறை இன்றி உழைக்க நேரிடலாம். கடைகளில் வழக்கத்துக்கு மாறாக வியாபாரம் கொஞ்சம் டல் அடிக்கும். பைனான்ஸியர்களுக்கு வருமானம் அமோகமாக இருக்கும்.

கடகம்:
விருந்தினர் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பிள்ளைகளின் மழலைப்பேச்சை உட்கார்ந்து ரசிப்பீர்கள். சிலர் காணாக்கிடைக்காத அரிய சம்பவங்களை காண நேரிடலாம். மனவருத்தங்கள் நீங்கி வல்லமைகூடும் இனிய நாளாக இருக்கும்.

சிம்மம்:
தாமதமான திருமணஏற்பாடுகள் ஜரூராக நடந்தேறும். வெளியூர் பயணங்கள் குடும்பத்தில் குதூகலத்தை உண்டாக்கும். பழைய நண்பர்களை சந்திப்பது நெகிழ்ச்சியான தருணமாக இருக்கும். இளமைகால நினைவுகளை அன்பாக பகிர்ந்து கொள்வீர்கள்.

கன்னி:
வீண் விரையங்கள் கையைச்சுட்டாலும் உங்கள் பலம் வெளிப்படும். பேசும் வார்த்தைகளால் வலிமை மிக்கவர்களாக காட்டிக்கொள்வீர்கள். மனோபலம் வலுக்கும் நாளாக அமையும். தாயாரின் உடல்நலன் மீது கவனம் செலுத்தவேண்டியதிருக்கும். மருத்துவ கட்டணம் செலுத்த நேரிடலாம்.

துலாம்:
சிலர் வெளியிடங்களுக்கு சென்றுவரும் பாக்யம் கிட்டும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் வீண்செலவுகள் அதிகமாகும். கொடுத்தவாக்கை காப்பாற்ற போராடவேண்டியதிருக்கும். சிலருக்கு வீடு மாறும் யோகம் உண்டு. வருமானம் அள்ளிக்கட்டும்.

விருச்சிகம்:
பெண்கள் மின்சாதன பொருட்களை கவனமுடன் கையாளவேண்டும். நன்மைகள் பல நடந்தேறும் நல்ல நாளாக இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக இருக்கும். இளைய சகோதர வகையில் சிறு சிறு தொந்தரவுகள் வந்து போய் வருத்தப்படவைக்கும்.

தனுசு:
அரசு உத்யோகஸ்தர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். சிலர் ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு மரியாதை உயரும். வியாபாரிகள் கடமையில் கண்ணாய் இருந்து லாபம் ஈட்டுவார்கள். அன்பாக பேசி காரியம் சாதிக்க வேண்டிய நாள்.

மகரம்:
பூர்வீக ஊர்களுக்கு சென்று திரும்பும் பாக்யம் கிட்டும். பெண்கள் தொட்டுக்கொடுக்கும் விஷயங்கள் வெற்றி பெறும். அம்மாவின் அரவணைப்பில் வளரும் பிள்ளைகள் மகத்தான சாதனை புரிவார்கள். வேலைகள் விடுமுறை இன்றி நடக்கும்.

கும்பம்:
முதியோர் இல்லங்களில் வசிக்கும் பெரியோர்கள் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பார்கள். டென்ஷனை தவிர்க்க வேண்டிய நாளாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சோம்பலைக் கொடுக்கலாம். சில காரியங்களுக்கு தலைமை ஏற்பீர்கள். வருமானத்திற்கு குறைவு இருக்காது.

மீனம்:
வியபாரிகள் வெளியூர் செல்ல நேரிட்டாலும் வேலையாட்கள் கடையை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். சிலர் குலதெய்வ கோவில்களுக்கு சென்று வரும் வாய்ப்புண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள். சராசரியான நாளாக அமையும்.

தொடர்புக்கு :-‘‘ஜோதிடரத்னா’’ –கே.பி.உதயசந்திரன் (பதஞ்சலி மெய்ஞான பீடம்) 9965405351

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media