தீபாவளிக்கு முந்தைய நாள் போக்குவரத்து நெரிசலால் ரூ 200 கோடி வீண்?

October 29, 2016 4:43 pm
தீபாவளிக்கு முந்தைய நாள் போக்குவரத்து நெரிசலால் ரூ 200 கோடி வீண்?

பெங்களூரு; தீபாவளிக்கு முந்தைய நாள் நாடு முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுமார் ரூ 200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாட்டில் உள்ள பெரிய நகரங்களின் கடை வீதிகளில் குவிந்தனர்.

இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சந்தை வீதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த போதும், கடைசி நேரத்தில் மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசலில் நாட்டின் மெட்ரோ நகரங்கள் சிக்கி தவித்தன. அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், மும்பை புனே போன்ற நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகளுக்கு காலவிரயம் மட்டும் அல்லாது எரிபொருளும் வீணாது. தீபாவளிக்கு முந்தைய நாளில் நாடு முழுவதும் ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலால் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் வீணாணதாக அசோசாம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media