இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு…!!

இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டனாக  விராட் கோலி தேர்வு…!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 10–ந் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி புனேயில் வருகிற 15–ந் தேதியும், 2–வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் 19–ந் தேதியும், 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் 22–ந் தேதியும், முதலாவது 20 ஓவர் போட்டி கான்பூரில் 26–ந் தேதியும், இரண்டாவது 20 ஓவர் போட்டி நாக்பூரில் 29–ந் தேதியும், 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 1–ந் தேதியும் நடக்கிறது.

மேலும் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டது
ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை வகித்து வந்த டோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்து விட்டதால் புதிய கேப்டனாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை வகிக்கும் விராட்கோலி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

விராட் கோலி முதல் முறையாக விராட் கோலி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை தொடங்க உள்ளார். இதனை தொடர்ந்து அணியில் யுவராஜ் சிங் மீண்டும் இடம்பெற்று உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி விபரம்: – லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்எஸ் டோனி, மணிஷ் பாண்டே, கெதர் ஜாதவ், யுவராஜ் சிங், ரெஹானே, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அமித் மிஷ்ரா, ஜாஸ்பிரித் பும்ராக், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டி அணி விபரம்:- லோகேஷ் ராகுல், மந்தீப் சிங், விராட் கோலி (கேப்டன்) எம் எஸ் டோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, யுஸ்வேந்திர ஷாகால், மணிஷ் பாண்டே, ஜாஸ்பிரித் பும்ராக், புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நேக்ரா. டெல்லியை சேர்ந்த வீரர் ரிஷாப் பந்த் விக்கெட் கீப்பராக முதல்முறையாக களமிறங்குகிறார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media