1954 ல் பிறந்தவர்களுக்கு நேரம் சரியில்லை: முதல்வர் ஆசையை ஒத்திவைக்க சசிகலா முடிவு

January 12, 2017 10:56 am
1954 ல் பிறந்தவர்களுக்கு நேரம் சரியில்லை: முதல்வர் ஆசையை ஒத்திவைக்க சசிகலா முடிவு

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அடித்துப் பிடித்து கட்சியின் பொது செயலாளர் ஆன சசிகலா, முதல் அமைச்சர் ஆவதற்கும் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார்.

அதற்காக நெருக்கடிகள் கொடுத்து, முதலமைச்சராக இருக்கும் பன்னீர் செல்வத்திற்கும் கடுமையான குடைச்சல்கள் கொடுத்து வந்தார்.

மறுபக்கம் தீபாவின் அரசியல் பிரவேசத்தை அகற்ற, பல்வேறு சதித் திட்டங்களையும் அரங்கேற்றி வந்தார்.

ஆனாலும், தொண்டர்கள் மத்தியில் தம் மீது இருக்கும் வெறுப்பையும் உணர்ந்தே வைத்திருந்தார்.

அதே சமயம் எஞ்சிய நான்காண்டு கால ஆட்சியை எப்படியாவது தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவரது நோக்கமாக இருந்தது.

இந்நிலையில், ஜோதிடர்கள் சிலர், மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சசிகலாவுக்கு தற்போது நேரம் சரியில்லை என்றும், அதனால் முதல்வர் ஆசையை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் அறிவுரை கூறியுள்ளனர்.

இதன் காரணமாக, முதல் அமைச்சராகும் தமது ஆசையை சசிகலா தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சசிகலா 1954 ம் ஆண்டு பிறந்தவர். அந்த ஆண்டில் ராஜா கிரகங்களான குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்களும் உச்சத்தில் இருந்தன.

அதனால் அந்த ஆண்டுகளில் பிறந்த பலர், பல துறைகளில் புகழ் பெற்று விளங்கினாலும், செல்வாக்கை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும்.

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், கமலஹாசன், ராமராஜன், ஹர்ஷத் மேத்தா, சரத் குமார் போன்ற பலர் 1954 ல் பிறந்தவர்கள்.

தற்போதைய சூழ்நிலையில் 1954 ம் ஆண்டில் பிறந்தவர்கள் அனைவருக்கும் நேரம் சரியில்லை என்றே முக்கிய ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இதை எல்லாம் மனதில் வைத்து கொஞ்சம் பொறுமையாக இருந்தாலும், முதல்வர் ஆவதற்கு இதுபோல் இன்னொரு வாய்ப்பு அமையாது என்பதால், ஜோதிடர்களின் ஆலோசனையை சசிகலா எப்போது வேண்டுமானாலும் புறக்கணிக்கலாம் என்றும், மன்னார்குடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media