தீபா ஆதரவாளர்கள் இன்று சென்னையில் முதல் ஆலோசனை கூட்டம்!

January 11, 2017 7:26 am
தீபா ஆதரவாளர்கள் இன்று சென்னையில் முதல் ஆலோசனை கூட்டம்!

அதிமுக பொதுச்செயலராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் அக்கட்சியின் பொதுச்செயலராக அவரது தோழி சசிகலா பதவியேற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேனர் மற்றும் கட் அவுட் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தொண்டர்கள் சென்னை டி. நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று சந்தித்து வருகின்றனர். அப்படி வரும் தொண்டர்களை காலையில் அவரது கணவரும், மாலையில் தீபாவும் சந்தித்து பேசி வருகின்றனர்.

தற்போது தீபா அரசியலுக்கு தான் வரப்போவதாகவும், அந்த பயணம் எம்.ஜி.ஆர் பிறந்த நாளான வருகிற 17 ம் தேதி தொடங்கும் என்று கூறி இருக்கும் தீபா, அன்று அது பற்றிய முக்கியமான விஷயங்களை சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற மாவட்டங்களில் இதுவரை அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் பல தடவை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். சென்னையில் இதுவரை நடக்கவில்லை. தற்போது சென்னையிலும் இன்று ஆலோசனை கூட்டம் நங்கநல்லூரில் உள்ள கே.சி.டி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு பிற மாவட்டங்களில் உள்ள தீபா ஆதரவாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media