‘சசி அத்தை எனது தாய், அவர் முதல்வராக உறுதி செய்வோம்’ ஜெவின் அண்ணன் மகன் தீபக்

January 4, 2017 12:30 pm
‘சசி அத்தை எனது தாய், அவர் முதல்வராக உறுதி செய்வோம்’ ஜெவின் அண்ணன் மகன் தீபக்

சென்னை: சசி அத்தை, சசி அத்தை என்று வாய் நிறையக் கூப்பிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் பேட்டியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலாவை எப்படி அழைப்பார்? என்று தலைமை செய்தி ஆசிரியர் பாண்டே பாண்டே கூறியது. ஆனால் இப்போது அதே தீபக் சசிகலாவை அம்மா என்று கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இத்தனை நாட்களாக சசி அத்தை.., சசி அத்தை.., என்று கூறி வந்தவர் திடீரென அம்மா என்று அழைக்க ஆரம்பித்திருப்பதன் பொருள், காரணம் என்ன என்ற பெரும் விவாதம் வெடித்துள்ளது.

அத்தை வழி நடத்திய அதிமுகவின் அடுத்த வாரிசாக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் தீபக்கின் சகோதரி தீபா தீவிரமாக உள்ள நிலையில் அதை முறியடிக்க சசிகலா தரப்பு தீபக்குக்கு இப்படி கூறுமாறு குறிப்பு ஏதேனும் கொடுத்துக் களம் இறக்கி விட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவின்போது இறுதி சடங்குகள் செய்தவர் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன், தீபக். அவரோடு சேர்ந்து ஜெ. தோழி சசிகலாவும் ஈமக் கிரியைகள் செய்தார். ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களில் தீபக்கையும் தனது கஸ்டடியில் வைத்திருந்தார் சசிகலா. இதுவும் கூட அப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு தீபக் அளித்த பேட்டியில், சசிகலா எனது அம்மா போன்றவர். அவர் எனது தாய். எனவே அவருடன் பேசிக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கே இடமில்லை. சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார். சமீபத்தில் தந்தி டிவிக்கு தீபா ஒரு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரை பேட்டி கண்ட ரங்கநாத் பாண்டே கூறுகையில் வாய்க்கு வாய் சசி அத்தை சசி அத்தை என்று கூறுகிறார் தீபக் என்று கூறியிருந்தார். ஆனால் தீபக்கோ சசிகலாவை தனது தாய் என்று கூறியுள்ளார். அத்தை எப்படி திடீரென அன்னை ஆனார் என்ற சலசலப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares