சசிகலாவை ஓரங்கட்ட ஜெயலலிதா பாணியில் பன்னீர் மூவ்!

January 11, 2017 1:32 pm
சசிகலாவை ஓரங்கட்ட ஜெயலலிதா பாணியில் பன்னீர் மூவ்!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வராக பொறுப்பேற்றார் பன்னீர்செல்வம். அப்போது சென்னையில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய களத்தில் நேரடியாக இறங்கினார் பன்னீர்செல்வம். அவரது இந்த துரித நடவடிக்கைக்கு காரணம், அமைச்சர்களும், சில அதிகாரிகளும், முதல்வர் பன்னீர்செல்வத்தில் கட்டளையை ஏற்காமலும், அவரை சிறிது மதிக்காததே என்றும் கூறப்படுகிறது. கடந்த 2013 ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டது. அப்போது வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய, அமைச்சர்கள் குழுவை நியமித்தார்.

அந்த அமைச்சர் குழுவின் அறிக்கை அடிப்படையில், அந்த ஆண்டு, சென்னை தவிர மற்ற மாவட்டங்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டன. அதேபோல இப்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. ஜெ. பாணியில், வறட்சி பாதிப்பை பார்வையிட்டு அறிக்கை அளிக்க, அமைச்சர்கள் குழுவை முதல்வர் பன்னீர்செல்வம் நியமித்தார்.

அவர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும், வறட்சி பாதித்தவையாக அறிவித்து, நிவாரண திட்டங்களையும் அறிவித்துள்ளார். ஜெ. மறைவுக்கு பிறகு, சசிகலா பொதுச்செயலாளர் ஆனதும், பன்னீர் கடிவாளம் போடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு இடையில் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media