”நம்புங்க நானும் சின்னம்மா விசுவாசிதான்” கதறும் நடிகர் மனோபாலா

January 12, 2017 11:46 am
”நம்புங்க நானும் சின்னம்மா விசுவாசிதான்” கதறும் நடிகர் மனோபாலா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை தரம் தாழ்த்தி விமர்சித்ததாக நடிகர் மனோபாலா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை அ.தி.மு.க பிரமுகர் புகார் மனுவில், அ.தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கும் மனோபாலா, வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவை குறிப்பிட்டு இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.

இதனால், இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த மனோபாலா, ஒரு புகார் மனுவை கொடுத்தார்.

அதில், நான் படப்பிடிப்புக்குபோகும்போது ஷாட் இடைவேளையின்போது எனது செல்போனை வைத்துவிட்டு போவது வழக்கம். அப்போது யாரோ என் செல்போனை தவறாக பயன்படுத்தி, அதை உள்நோக்கத்தோடு அனுப்பி இருக்கக் கூடும். நான் அதிமுகவில் கடந்த 15 வருடங்களாக உறுப்பினராக மட்டுமில்லாமல் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளேன். என்மேல் என் புகழ்மேல் களங்கம் கற்பிக்கவும், அவதூறு பரப்பவும் திட்டமிட்டு செய்த செயலாக தெரிகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் என்றும் அதிமுக விசுவாசிதான் என புகார் மனுவில் கூறியுள்ளார். புகார் மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த மனோபாலாவிடம், கடந்த மாத இறுதியில் நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை. அதிமுகவில் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு,

ஏங்க.. நான் என்றும் அதிமுக விசுவாசிதான். நம்புங்க… நான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினராக இல்லை. நட்சத்திரப் பேச்சாளர் அவ்வளவுதான். எங்களைப் போன்றவர்கள் 44 பேர் நடிகர் குண்டுகல்யாணம் தலைமையில் சசிகலாவை சந்தித்து எங்களது ஆதரவை தெரிவித்துவிட்டு வந்தோம் இப்போது நானும் சின்னம்மாவின் விசுவாசிதான் என்றார். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது நடந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது மனோபாலா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

குழுசேர்

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares