போயஸ் கார்டனில் மன்னார்குடி மாஃபியா மீட்டிங்?

January 12, 2017 5:39 am
போயஸ் கார்டனில் மன்னார்குடி மாஃபியா மீட்டிங்?

நேற்று காலை சசிகலா போயஸ் கார்டனில் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார். அவசர கூட்டம் என்றால் அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களுக்கான கூட்டமோ அல்ல, தங்களுடைய உறவினர்கள் அனைவரையும் வரவழைத்து பேசினார்.

உறவினர்களுடனான கூட்டத்தில் பேசுகையில்; போயஸ் கார்டனுக்கு இனிமேல் விவேக்கும், ஜெயானந்தும் மட்டும் வந்தால் போதும். வேறு யாரும் இங்கு வர வேண்டாம் உங்களுக்கு தேவையானது எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். சசிகலா இப்படி ஒரு அதிரடி முடிவை அறிவிக்க முக்கிய காரணம் தினகரன்.அவர் மீது கடுங்கோபத்தில் உள்ளார் சசிகலா.

தினகரன் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சசிகலாவிடம் நேரடியாக புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், தினகரனின் பேச்சு தன் மனதை புண்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் பா. ஜ. க அரசிடமும் மற்ற கட்சியினரிடமும் அ.தி.மு.க சார்பில் பேசக்கூடிய ஒரே நபர் தம்பிதுரை மட்டுமே. இந்நிலையில் அவர் மனம் புண்படும் படி பேசிய தினகரனை அழைத்து “நீ எப்படி அவர் மனம் புண்படும் படி பேசலாம்?” எனத் திட்டியிருக்கிறார்.

இதையடுத்து தங்களது உறவினர்கள் யாரும் கட்சியிலோ, ஆட்சியிலோ தலையிடக் கூடாது என்றும். இனி, போயஸ் கார்டனுக்கு விவேக்கும், ஜெயானந்தும் மட்டும் வந்தால் போதும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.ஆனால் சசிகலாவின் இந்த உத்தரவு எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதே கேள்வி!

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media