முதல்வராக பெறுப்பேற்க அமைச்சரவை பட்டியலுடன் காத்திருக்கும் சசிகலா!

January 11, 2017 2:16 pm
முதல்வராக பெறுப்பேற்க அமைச்சரவை பட்டியலுடன் காத்திருக்கும் சசிகலா!

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தற்போது முதல்வராக வேண்டி முன்கூட்டியே செய்யவேண்டிய பணிகளை செய்து பதவியேற்க நாள்குறித்து வைத்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறார். எந்த இடையூறுகளோ, சிக்கலோ இல்லாமல் பதவியேற்க வேண்டும் என்ற டென்ஷன் மட்டுமே உள்ளதாம். இவரின் அமைச்சரவையிலும் மாற்றத்தை கொண்டுவர பட்டியலும் தயாராக இருக்கிறதாம்

மேலும், முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சபாநாயகராக நியமிக்கலாம் என்பதுதான் சசிகலாவின் திட்டம். காரணம், பன்னீரை டம்மியாக வைத்திருக்க சபாநாயகர் பதவிதான் சரியானதாக இருக்கும் என நினைக்கிறாராம். இது, பன்னீர் கவனத்துக்கும் போயிருக்கிறது. ஆனால் அவரோ, எந்த ரியாக்ஷனும் காட்டவில்லையாம். இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பன்னீரை சபாநாயகராக ஆக்கிவிட்டால், அவரால் கட்சிப் பதவியிலும் நீடிக்க முடியாது. அதையும் அவரிடமிருந்து பிடுங்கிவிடலாம். ஆக, ‘இருப்பாரு… ஆனா இருக்க மாட்டாரு’ என்ற நிலைக்கு பன்னீர் தள்ளப்பட்டுவிடுவார்.

சபாநாயகராக பன்னீர்செல்வத்தை நியமித்தால், தற்போது சபாநாயகராக இருக்கும் தனபாலை என்ன செய்வது? இதற்கும் பிளான் இருக்கிறதாம் தனபாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயாராம் அடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவரப் போகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிருப்தியாக இருந்தவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். அவரைப் பேசி சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அதனால், செங்கோட்டையனுக்கு வேளாண்மைத் துறை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனுக்கு பொதுப்பணித் துறை வழங்கலாம் என்றுதான் முன்பு பேச்சு ஓடியது. ஆனால் பொதுப்பணித் துறையை தற்போது வகிக்கும் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவுக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கிறார். பழனிசாமியிடமிருந்து எந்தப் பொறுப்பையும் மாற்ற வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். அதனால், செங்கோட்டையனுக்கு வேளாண்மைத் துறை ஒதுக்கலாம்.

அதேபோல, தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் கரூர் விஜயபாஸ்கர். அந்த துறையை அவரிடமிருந்து மாற்றி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். விஜயபாஸ்கருக்கு கரூர் மாவட்ட கழகச் செயலாளர் என்ற கட்சிப் பொறுப்பை மட்டும் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு பதவி என்பது ஏற்கனவே சசிகலா முடிவெடுத்ததுதான். அதை இந்த இடத்தில் அமல்படுத்தப்போகிறார். இப்படியாக, யாரை எந்த அமைச்சராக்கலாம். யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என முடிவெடுத்துவிட்டார் சசிகலா.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media