தேசியக் கொடியை அவமதித்த அமேசான் நிறுவனத்திற்கு சுஷ்மா ஸ்வராஜ் கடும் எச்சரிக்கை.

January 11, 2017 4:42 pm
தேசியக் கொடியை அவமதித்த அமேசான் நிறுவனத்திற்கு சுஷ்மா ஸ்வராஜ் கடும் எச்சரிக்கை.

இந்திய தேசிய கொடியை அவமதித்த அமேசான் நிறுவனத்திற்கு மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி பொறித்த கால் மிதியடி விற்பனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமது டுவிட்டர் வலைதலத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இச்சம்பவத்திற்கு அமேசான் நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், தவறினால் அமேசான் அதிகாரிகளுக்கான இந்தியா விசாக்கள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான அனைத்து பொருட்களையும் அமேசான் நிறுவனம், தனது இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இப்பிரச்சனையை அமேசான் நிறுவனத்திடம் எடுத்துச் செல்லுமாறு கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தையும் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேசிய கொடிகள் வடிவிலான, மிதியடிகளுக்கு கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து, அமேசான் நிறுவனம், அவற்றை தனது இணையதளத்தில் இருந்து அகற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media