“மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” – ராஜேஷ் லாக்கனியிடம் தமிழிசை கோரிக்கை மனு!

November 22, 2016 9:18 am
“மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” – ராஜேஷ் லாக்கனியிடம் தமிழிசை கோரிக்கை மனு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாகு எண்ணிக்கையின் போது,பாஜக மற்றும் தேமுதிக ஆதரவாளர்களை வாக்கு என்னும் அறைக்குள் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் அரவக்குறிச்சியில் காலை முதலே பரபரப்பு நிலவியது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் அதிமுக, திமுக முகவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாஜக, தேமுதிக வேட்பாளர்களும் முகவர்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக-வினரும், தேமுதிக-வினரும் தங்கள் வேட்பாளர்களுடன் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து போக போலீஸார் சொன்ன நிலையில் அதை மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். இதனால் பாஜக-வினரும், தேமுதிக-வினரும் ஆத்திரம் அடைந்தனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார் அம்மனுவில், “அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக முகவர்களை அனுமதிக்காததோடு, அதற்கு எதிராகப் போராடிய வேட்பாளர்கள் உள்ளிட்ட முகவர்களை கைது செய்து அடைத்தும் வைத்துள்ளனர். இதனால் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். தங்களையும் மீறி அரவக்குறிச்சி தொகுதி வெற்றியை அறிவித்தால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர் பாஜக-வினர்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media