‘துருமுகி வருடம், தை மாதம் 6ஆம் தேதி, (2017 ஜனவரி 19ஆம் தேதி) முதல்வராகும் சசிகலா!

January 10, 2017 2:02 pm
‘துருமுகி வருடம், தை மாதம் 6ஆம் தேதி, (2017 ஜனவரி 19ஆம் தேதி) முதல்வராகும் சசிகலா!

ஜனவரி 12ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக்கொள்ள நாள் நட்சத்திரம் பார்த்து தயாராக இருந்தார் புதிதாக அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா நடராஜன். மத்திய அரசு பல தடைக்கற்கள் போட்டது.

இதனிடையே டெல்லி சென்ற மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் உதய் திட்டம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுக்கு, அதிமுக ஆட்சி முழு ஒத்துழைப்பு கொடுத்துவருவதாலும், கொடுக்கப்போவதாலும், சசிகலா முதல்வர் பதவியேற்க பச்சைக்கொடி அசைத்துவிட்டது மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய பாஜக அரசு.

எல்லாம் கூடிவந்த பிறகுதான் முதல்வராகப் பதவியேற்க நல்ல நாள் பார்க்கப்பட்டது. சசிகலாவின் ஆஸ்தான ஜோதிடரான சூட்கேஸ் ஜோதிடர் ஜமால் இரண்டு தேதிகளை குறித்துக் கொடுத்தார். அதேபோல கபாலீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த குருக்கள் ஒருவரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டிருக்கிறது.

‘துருமுகி வருடம், தை மாதம் 6ஆம் தேதி, (2017 ஜனவரி 19ஆம் தேதி) வியாழக்கிழமை, சித்திரை நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினம் சரியாக இருக்கும் என குருக்கள் சொல்லியிருக்கிறார். சூட்கேஸ் ஜோதிடர் குறித்துக் கொடுத்த இரண்டு நாட்களில் ஒன்று அதே 19ஆம் தேதி. அதனால் 19ஆம் தேதி பதவியேற்புக்கு தயாராகிவிட்டாராம் சசிகலா.

தற்போதைய முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்தால் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பதால்தான் அவரிடம் முன்கூட்டியே ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியிருக்கிறது கார்டன் தரப்பு. தேவைப்பட்டால், அந்த ராஜினாமா கடிதம் பயன்படுத்தப்படும். ஆனால், அதற்கு அவசியம் இருக்காது. முதல்வர் பன்னீர்செல்வம், எந்த நேரத்தில் சொன்னாலும் பதவியிலிருந்து விலகத் தயாராகவே இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media