எஸ்.பி.ஐ வங்கியில் இதுவரை 52 ஆயிரம் கோடி டெபாசிட் !

November 11, 2016 10:45 am
எஸ்.பி.ஐ வங்கியில் இதுவரை 52 ஆயிரம் கோடி டெபாசிட் !

தமிழகம் : 500 ,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8 -ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட பிறகு, பொது மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றி புதிதாக வெளியிடப்பட்ட 2000, 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றும் நோக்கத்தோடும், வங்கிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தமிழத்தில் மட்டும் எஸ்.பி.ஐ வங்கியில் இதுவரை 52 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31 ஆயிரம் கோடியும், இன்று தற்போது வரை மேலும் 22000 கோடி ரூபாய் அளவில் பணம் டெபாசிட்  தகவல் வெளியாகியுள்ளது.

நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை அன்றும் வங்கிகள் செயல் படும் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் முதியவர்களும் பயன் பெரும் வகையில் சிறப்பு கவுண்டர்களும், அமர்வதற்கு தனி இடமும் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media