ஜெயலலிதா இன்று டிஸ்சார்ஜ் ஆவாரா? மருத்துவர்கள் தீவிர ஆலோசனை!

October 28, 2016 8:10 am
ஜெயலலிதா இன்று  டிஸ்சார்ஜ் ஆவாரா? மருத்துவர்கள் தீவிர ஆலோசனை!

தீபாவளிக்கு முன் ஜெ.,வை போயஸ் தோட்டத்திற்கு அழைத்துச் செல்ல முழுமூச்சில் செயல்பட்டார் சசிகலா நடராஜன், அதற்கு மருத்துவர்கள் அனுமதிப்பார்களா? ஜெயலலிதா இன்று வீடு திரும்புவாரா? என அதிமுக தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில் இன்று காலை முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் தீவிரமான ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள்.

அவரது உடல்நலம் தொடர்பான பல்வேறு அறிக்கைகள், பரிசோதனைகளைச் செய்தவர்கள் அதை லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அங்கு அதிகாலை என்பதால் அவரிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. இங்குள்ள நிலைமைகளை விரிவாக அனுப்பியிருக்கும் இவர்களது ரிப்போர்ட்டுகளை வைத்துதான் ரிச்சர்ட் பேல் ஆய்வு செய்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.

ரிச்சர்ட் பேல் தலைமையில், எய்ம்ஸ் மருத்துவர்கள், டாக்டர் சிவக்குமார் தலைமையில் அப்பல்லோ மருத்துவர்கள் என இன்று இவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பாகவும், இன்று முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவாரா? அது தொடர்பான தகவல்கள் என்ன? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்…

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media