தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் நிச்சயம் காக்கப்படும் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும்; ஓ.பி.எஸ்

January 11, 2017 7:34 am
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் நிச்சயம் காக்கப்படும் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும்; ஓ.பி.எஸ்

சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கைவிரித்துள்ள போதும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் எனவும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை வந்தது என்ற காரணங்களையெல்லாம் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் நிச்சயம் காக்கப்படும் என்றும், தமிழர்களின் கலாசாரம்,பண்பாடு கட்டிக்காக்கப்படும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எள்ளளவும் தமிழக அரசு பின்வாங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media