இன்று நள்ளிரவு வரை மின்கட்டணம் செலுத்தலாம் ! மின்சார வாரியம் அறிவிப்பு !

November 11, 2016 9:41 am
இன்று நள்ளிரவு வரை மின்கட்டணம் செலுத்தலாம் ! மின்சார வாரியம் அறிவிப்பு !

சென்னை: பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக இன்று நள்ளிரவு வரை மின் கட்டண வசூல் மையங்கள் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

இதனால் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தி இன்று நள்ளிரவு வரை மின்கட்டண செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக இன்று நள்ளிரவு வரை மின் கட்டண மையங்கள் திறந்திருக்கும என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செலுத்தியும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிற்பகல் 2.45 மணி வரை மட்டுமே இயங்கும் மின் கட்டண வசூல் மையங்கள் இன்று நள்ளிரவு வரை செயல்படும். அதனால் மக்கள் கவலைப்படாமல் தங்களது மின் கட்டணங்களை செலுத்ததலாம்.

முன்னதாக, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட மாட்டாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்திருந்த நிலையில் தற்போது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு ஏற்படும் அலைச்சல் சற்று குறைந்துள்ளது.மேலும் பி.எஸ்.என்.எல் தொலைபேசி கட்டணங்களும் 500 ,1000 நோட்டுகளை பயன்படுத்தி செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media