பி.ஜெ.பி யில் இருந்தால் திருநாவுக்கரசர் பிரதமர் ஆகி இருப்பாரா : இளங்கோவன் கேள்வி?

January 10, 2017 8:59 am
பி.ஜெ.பி யில் இருந்தால் திருநாவுக்கரசர் பிரதமர் ஆகி இருப்பாரா : இளங்கோவன் கேள்வி?

அதிமுக வில் இருந்திருந்தால் தற்போது முதலமைச்சராகி இருப்பேன் என்று சொல்லும் திருநாவுக்கரசர், பி.ஜெ.பி யில் இருந்தால் பிரதமராகி இருப்பாரா? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக, பல விஷயங்களில், முன்னாள் தலைவர் இளங்கோவன் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த, இளங்கோவன், , இப்போது பி.ஜெ.பி யில் திருநாவுக்கரசர் இருந்திருந்தால் பிரதமர் ஆகிருப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு வரும் நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது என்றார்.

எனவே, இப்பிரச்னையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலையிட்டு சுமுக முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media