முகநூல் சொல்லும்….நடராஜனின் ராஜ தந்திரம்

முகநூல் சொல்லும்….நடராஜனின் ராஜ தந்திரம்

தன்னால் முடியாத நிலையில் தன் வளர்ப்பினை கலைஞர் செயல் தலைவர் எனும் நிலையில் அமர்த்தி இருக்கின்றார்

அவ்வளவுதான் நடந்தது, கட்சி தலைவர் கூட ஆகவில்லை

அதற்குள் வெற்றி, வெற்றி, வெற்றி மாபெரும் வெற்றி, ஸ்டாலின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி, அமைதிக்கு கிடைத்த வெற்றி என ஏக ஆர்ப்பாட்டம்.

இவர்களுக்கும் சின்னம்மா என புலம்பும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

சின்னாமா அக்கட்சியிலும், ஸ்டாலின் இக்கட்சியிலும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என சொன்னால் சிரிப்பு வராதா?

ஆனாலும் இருவரும் மகா சீரியசாக சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

ஒருவன் ஒரு படி மேலே போய் ராஜிவ், ராகுல் போல அல்ல மிக காத்திருந்து பதவிக்கு வந்தார் என புகழ்கின்றானாம்.

அட பைத்தியகாரா? ராஜிவ் ஆயுள் என்ன? இந்திரா ஆயுள் என்ன?

எல்லோரும் கலைஞர் போல நீண்டு வாழ முடியுமா?

மொத்தத்தில் அடிப்படை குணம் இரு கட்சிகளுக்கும் ஒன்று போலவே இருக்கின்றது

சின்னம்மா தியாகம் பெரிதா? ஸ்டாலின் பொறுமை பெரிதா என பெரும் பட்டிமன்றத்தில் இறங்கிவிட்டார்கள்

ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது மிக சரியானது..

சின்னம்மா, ஸ்டாலினை விடுங்கள்

இப்பொழுதுள்ள சூழலில் நடராஜனின் ராஜ தந்திரமே வியக்கதக்கது

சோ, கலைஞர் வரிசையில் நடராஜனும் சேர்ந்துகொண்டார் என்பது மட்டும் தெளிவு

அரசியல் காற்று இப்பொழுது அவர் பக்கமே வீசுகின்றது

இப்போதைக்கு குறும்பாக‌ பார்க்க வேண்டியது நடராஜனைத்தான், ஒரு சிறு குழப்பமும் அவர் பாதையில் இல்லை

மிக நேர்த்தியாக வரையபட்ட திட்டம் இது,

ஜெயாவினை சுற்றி ஒரு வளையம் அமைத்து, அவரை தனிமை படுத்தி, யாரையும் நெருங்கவிடாமல் காத்து, அவர் மரணம் வரை கைக்குள் வைத்திருந்து..

30 ஆண்டுகால திட்டத்தை மிக நேர்த்தியாக நகர்த்தி ஒரு பிசிறின்றி முடித்துகொண்டிருக்கின்றார்

ஜெயா எனும் யானை, தன் பலம் தெரியாமல் இந்த சசிகலா எனும் சங்கிலியில் சிக்கி இருந்ததுதான் சோகம்.

அதிமுக வரலாற்றில் எம்ஜிஆருக்கு பின் இருக்கபோகும் முத்திரை நிச்சயம் நடராஜனே..

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media