அரசு ஊழியர்களுக்கு 28-ஆம் தேதியே சம்பளம் வழங்க உத்தரவு

October 25, 2016 11:21 am
அரசு ஊழியர்களுக்கு 28-ஆம் தேதியே சம்பளம் வழங்க உத்தரவு

சென்னை: மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதை கணக்கில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கான, இம்மாத ஊதியத்தை 28ம் தேதியே வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 29-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது . அதனால் அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திநர் கோரிக்கை விடுத்தனர் .

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து அக்டோபர் மாதததிற்கான ஊதியத்தினை அக்டோபர் 28ம் தேதியன்று வழங்க சம்மந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரை வழங்க முதன்மைச் செயலர் / கருவூல கணக்கு ஆணையருக்கு அனுமதியளித்து ஆணையிடுகிறது. இவ்வாறு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media