ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது கைவிரித்த உச்சநீதிமன்றம்!

January 12, 2017 6:20 am
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது கைவிரித்த   உச்சநீதிமன்றம்!

டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை நடைபெற இரண்டு நாளே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கலுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கைய நிராகரித்த உச்சநீதிமன்றம், தற்போதுதான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்குவது சாத்தியமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media