இந்த அக்கா எப்பவும் இப்படித்தான் காமெடியா பேசுவாங்க..,பணம் பட்டுவாடா நடக்காமல் இருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம் – தமிழிசை

November 22, 2016 9:03 am
இந்த அக்கா எப்பவும் இப்படித்தான் காமெடியா பேசுவாங்க..,பணம் பட்டுவாடா நடக்காமல் இருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம் – தமிழிசை

சென்னை : பணம் பட்டுவாடா நடக்காமல் இருந்தால் இடைத்தேர்தலில் நாங்கள் ஜெயித்துஇருப்போம் என பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை கூறினார்.

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.இதனை அடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், போட்டியிட்ட பா.ஜ.க., தோல்வியை தழுவியது.

இதையொட்டி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சட்டமன்ற இடைத்தேர்தல் என்றலே ஆளுங்கட்சிக்கு சாகதமாக அமைந்துவிடும் என்பது எழுதப்படாத விதிகளாகவே உள்ளது. இதனை மாற்றுவதற்காகவே, பா.ஜ.க., இடைத் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால்,புதுவை உட்பட 4 தொகுதியிலும் பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்தது. இதனால், நாங்கள் தோல்வியடைந்துள்ளோம்.

மேலும் வளர்ந்து வரும் கட்சிகளை தோற்கடிப்பது, ஆளுங்கட்சியின் வேலையாகவே இருக்கும். அதேபோலதான் நாங்கள் தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக இருக்கிறோம். எத்தனை தடைகள் வந்தாலும், அதை தகர்த்தெறிந்து வெற்றி பெற வேண்டும் என உறுதியாக போட்டியிட்டோம். ஆனால், பணப்பட்டுவாடா செய்து, எங்கள் வெற்றியை பறித்து விட்டனர்.

மேற்கண்ட 3 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யாமல், நேர்மையாக தேர்தலை நடத்தி இருந்தால், பா.ஜ.க., நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும் என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media