ஜல்லிக்கட்டு: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை திமுக கண்டனம்.

January 12, 2017 8:59 am
ஜல்லிக்கட்டு: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை திமுக கண்டனம்.

சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், வழக்கறிஞர்கள் இப்போராட்டத்தில் கிளர்ந்து எழும்பி உள்ளனர். எனவே உச்சநீதி மன்றம் தடையை நீக்கவேண்டும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார் .

சில இடங்களில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media