போயஸ் வீடு யாருக்கு?வாரிசு சண்டை, வழக்காக மாறுமா ?உச்ச கட்ட எரிச்சலில் சசிகலா!

December 7, 2016 11:47 am
போயஸ் வீடு யாருக்கு?வாரிசு சண்டை, வழக்காக மாறுமா ?உச்ச கட்ட எரிச்சலில் சசிகலா!

1991ம் ஆண்டு முதல்வர் ஆனது முதல் சசிகலாவே ஜெயலலிதாவுடன் நிழலாக இருந்து வந்தாா். முதல்வர் ஜெவுக்கு என்று உள்ள ஒரே ரத்த சொந்தங்கள் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். மகள் தீபா. இவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க விடாமலேயே தடுத்து வந்தார் சசிகலா. உடல் நிலை மோசமான போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பல்வேறு தலைவர்கள் என யார், யாரே வந்து பார்க்க அனுமதிக் கிடைத்தது.

ரத்த உறவுகளுக்கு அனுமதிக் கிடைக்கவில்லை. அண்ணன் மகன் தீபக்கை வளைத்தார் சசிகலா. ஆனால் ஜெயலலிதாவின் முக சாயலில் உள்ள தீபாவை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். ஜெயலலிதா இறந்த பின்பு ரத்த சொந்தம் தீபா பொதுமக்களோடு பொதுமக்களாகதான் அஞ்சலி செலுத்தினர். ஜெவின் உடல் அருகே கூட அனுமதிக்க வில்லை.

ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கை கூட சசிகலாவே செய்தார். அங்கு கூட தீபக்கிற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. வேதா இல்லம் எனப்படும் போயஸ் கார்டன் உள்ளிட்ட ஜெயலலிதாவின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் ரத்த சொந்த உறவுகளுக்குதான் போய் சேரவேண்டுமாம்.

இதனை அவர்கள் லேசில் விடுவதாக இல்லை என தெரிகிறது. இது சொத்து கேட்டு வழக்காக கூட மாறும் நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ரத்த சொந்த உறவுகள் மீது உடன் பிறவா சகோதரி உச்ச கட்ட எரிச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருமணம் ஆகாதவர் என்பது அனைவரும் அறிந்ததே. 20 வருடத்திற்கு மேலாய் தன் சொந்த பந்தங்களை பிரிந்து தனிக்காட்டு ராணியாக இது நாள் வரை தன் தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை மட்டும் வைத்து வாழ்ந்து வந்தவர்.

ஆமாம் யார் இந்த விவேக்?

ஜெவின்., மறைவுக்கு பின் அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் யாருக்கு செல்லப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. அதற்கான, விடை தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்படும் விவேக் ஜெயராமனுக்கு தானாம்.

அவர் வேறு யாருமில்லை, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசியின் மகன் தான்.

ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து ஜெயராமன் , சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் மூன்று குழந்தைகளோடு தவித்த வந்த ஜெயராமனின் மனைவி இளவரசியை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வந்தார் ஜெயலலிதா. விவேக் அப்போது கைக்குழந்தை.

எம்.பி.ஏ படிப்பை முடித்த விவேகிடம் ,ஜாஸ் சினிமா பொறுப்பு தரப்பட்டது. உண்மையில் இவர் தான் ஜெயலலிதாவின் முறைப்படி அறிவிக்கபடாத வளர்ப்பு பிள்ளை. சமீபத்தில் நடந்த இவரது திருமணத்திற்கு கூட ஜெயலலிதா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media