கருணாநிதியின் தற்போதைய நிலையை விளக்கும் புகைப்படம்..,

கருணாநிதியின் தற்போதைய நிலையை விளக்கும் புகைப்படம்..,

சென்னை : இன்று மாலை 4 மணியளவில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்புக்கு எதிராக தி.மு.க., மனிதச் சங்கிலி போராட்டத்தை தமிழகம் முழுக்க நடத்தியது.

மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்த திமுக தலைவர் கருணாநிதி உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் முழுமையாக ஆறாமல், சில சில இடங்களில் அதன் ரணமும், வலியும் இருப்பதாலும், கைகளை அசைக்கவோ, உயர்த்தவோ சிரமப்படுவதாலும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், பேராசிரியர் அன்பழகன் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.கொப்புளங்களால் பாதிக்கப்பட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்களைத் தவிர கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட எவரையும் சந்திக்கவில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் கருணாநிதியை, முதன் முதலாக பேராசிரியர் நேரில் பார்த்து, ஆறுதலாக கலைஞரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் மு.க.ஸ்டாலின் மவுனமாக நின்று கொண்டிருக்கும் புகை படத்தை மின்னம்பலம் இனைய நாளிதழ் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media