கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பேராசிரியை படுகொலை..!

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பேராசிரியை படுகொலை..!

கோவையில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த கல்லூரி பேராசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இருகூரை சேர்ந்தவர் சிவலிங்கம் என்பவரின் மனைவி லதா வயது(38). திருப்பூர் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 4 வயது மகனுடன் இருகூர் ஐஓபி காலனியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு லதா, ராம்நகரில் குடியிருக்கும் தனது தாயார் வீட்டில் மகனை விட்டு வந்துள்ளார்.

நேற்று காலை 7 மணிக்கு லதாவை பார்க்க வந்த அவரது மாமன் மகள் ராணி, திறந்திருந்த வீட்டிற்குள் கருகிய நிலையில் பிணமாக லதாவைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவ இடத்தில் கூடிய உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து விசாரணயை துவக்கிய போலீசார் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

லதாவின் கழுத்தில் வெட்டுக்காயம் இருந்தது. கை மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை காணவில்லை. மேலும், அவரது படுக்கை அறையில் ஆடைகள் சிதறி கிடந்தது.

படுக்கையும் பாதி எரிந்து இருந்தது. வீட்டின் முன்பு மிளகாய் தூள் சிதறி கிடந்தது. லதாவை பலாத்காரம் செய்ய முயன்று கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தடயங்களை அழிக்க தீ வைத்து கொளுத்திவிட்டு, மிளகாய் பொடி தூவிச்சென்றிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

லதா கடைசியாக யாரோடெல்லாம் செல்போனில் பேசினாரோ அவர்களிடமும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர் போலீசார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media