விரைவில் விசாரணைக்கு வரும் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு!

October 23, 2016 2:08 pm
விரைவில் விசாரணைக்கு வரும் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு!

கடந்த முறை பதவியில் இருந்தபோது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த தேவி உள்ளிட்ட 37 பேர், தங்களிடம் ரூ.60 லட்சம் வரை வசூலித்து விட்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து 37 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி கிளையின் நிர்வாக இயக்குநராக இருந்த ரங்கராஜ், ஓய்வு பெற்ற மேலாளர் பாபு ஆகியோர் மூலம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ரூ.60 லட்சம் வசூலித்து ஏமாற்றியதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணத்தைத் திருப்பி கேட்ட தங்கள் மீது பொய் வழக்கு போட்டு காவல்துறையினர் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி போட்டியிட உள்ள நிலையில், அவர் மீது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு செந்தில்பாலாஜிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media