யோவ், ஏன் கேள்விக்கு பதிலை சொல்லுய்யா? பீட்டாவை கேட்டாரே சத்யராஜ்!

January 12, 2017 9:14 am
யோவ், ஏன் கேள்விக்கு பதிலை சொல்லுய்யா? பீட்டாவை கேட்டாரே சத்யராஜ்!

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சத்தியராஜ் மனித வதை குறித்து ஏன் பீட்டா அமைப்பு வாய்திறக்கவில்லை என்றார்.

தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தமிழ் திரையுலகம் இந்த ஜல்லிக்கட்டு விஷயத்தில் கருத்தையும் ஆதரவையும், தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் , நடிகர்களின் படங்களை புறக்கணியுங்கள் என்று இளைஞர் கூட்டம் கடுப்பில் இருக்கின்ற காரணத்தினால், ஆதரவை தெரிவித்து வைப்போம் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பழ நெடுமாறன், பாரதிராஜா நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தின் போது பேசிய நடிகர் சத்தியராஜ் மிருகவதை பற்றி பேசுபவர்கள் மனித வதை பற்றி ஏன் கண்டுகொள்வதில்லை என அவர் பீட்டா மிருகங்கள் வதை பற்றியே பேசுதே, விவசாயிகள் உயிர் இழப்பது மனித வதை இல்லையா? அது ஏன் கண்ணில் தெரியலை எனவும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் சாதி, மதத்தால் பிரிந்து கிடக்கும் வரை நம்மை மிதிக்கத்தான் செய்வார்கள் என்றும் கூறினார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media