ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகம் இல்லை : ஜோதிடர்கள் மத்தியில் கசியும் தகவல்

January 7, 2017 9:39 am
ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகம் இல்லை : ஜோதிடர்கள் மத்தியில் கசியும் தகவல்

திமுக வின் செயல் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின், அடுத்த முதல் அமைச்சர் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலருக்கும் அதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

ஆனாலும், அவரது ஜாதகத்தில் தலைமைப் பதவியில் அமரும் யோகம் இல்லை என்று ஜோதிடர்கள் பலர், கிசு கிசுத்து வருகின்றனர்.

சிம்ம ராசியில் பிறந்த ஸ்டாலினுடைய ஜாதகத்தில், தேவ குரு என்று சொல்லப்படும் குரு பகவானும், அசுர குரு என்று சொல்லப்படும் சுக்கிரனும் இணைந்து ஒரே ராசியில் உள்ளனர்.

குருவும்-சுக்கிரனும் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தால் அதற்கு குரு-சுக்கிர மூடம் என்று பெயர்.

அது பல யோக பலன்களை வாரி வழங்கினாலும், உயர் பதவியில் அமரும் வாய்ப்பை மட்டும் தடுத்து விடும்.

இதே போன்ற அமைப்பு மறைந்த ஜி.கே.மூப்பனாருக்கு இருந்தது.

அதனால், பிரதமராக வருவதற்கான வாய்ப்பு அவருக்கு நெருங்கி வந்தாலும், இறுதியில் கை நழுவி போனது.

காங்கிரஸ் தலைவர் சோனியா ஜாதகத்திலும் குரு-சுக்கிரன் சேர்க்கை இருந்ததால், அக்கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதும், ஏதோ பல்வேறு காரணங்களால் அவரால் பிரதமராக வர முடியாமல் போனது.

அதே சமயம் குரு-சுக்கிரன் சேர்க்கைக்கு சனியின் பார்வை கிடைத்தால் அந்த தோஷம் விலகும். அது ஸ்டாலின் ஜாதகத்தில் இல்லை.

எனவே ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது ஜோதிட வட்டாரம்.

அதே போல், மஹாராஷ்டிராவில் ஏதாவது நடந்தால், அதற்கு நிகரான நிகழ்வு ஒன்று சேலத்தில் நிகழும் என்றும்.

இதை, மழை வெள்ளம் போன்ற நிகழ்வுகள் உறுதி படுத்தி உள்ளன என்றும் ஜோதிட வட்டாரம் கூறுகிறது.

மேலும் உத்திர பிரதேசத்தில் குழப்பம் ஏற்படும் போதெல்லாம், தமிழ் நாட்டில் திமுக வுக்கு சிக்கல் வரும் என்றும் ஜோதிட வட்டாரம் கூறுகிறது.

இதுபோல நாமும் பல தகவல்களை கேட்டு விட்டோம். அது போல இதையும் கேட்போம்.

நடக்கிறதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media