ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களுடன் களத்தில் குதித்த ஸ்டாலின்!

January 12, 2017 7:55 am
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களுடன் களத்தில் குதித்த ஸ்டாலின்!

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகம் முழுக்க மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் மாணவர் போராட்டம் வேகம் பெற்று வரும் நிலையில் சென்னையிலும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று நடத்திய போராட்டத்தில் காலையிலேயே போய் கலந்து கொண்ட கொண்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூலில் பதிவில்;

இன்று காலை சென்னை புதுக் கல்லூரியில், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தேன். ஜல்லிக்கட்டு கோரி மாணவர்கள் தமிழகம் முழுதும் உணர்வு மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வரவேற்பிற்குரியது.

மொழிப் போரில் மாணவர்களிடம் ஏற்பட்ட இப்படிப்பட்ட எழுச்சி தான் தாய்மொழியைக் காத்தது. அதுபோலவே தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டையும் மாணவர்களின் போராட்டம் காக்கும் என நம்புகிறேன்.

மாணவர்கள் உணர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தலைவணங்கி ஜல்லிகட்டை நடத்த அனைத்து அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநில அரசோ அல்லது மத்திய அரசோ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை இன்றே அணுகி இதற்கு தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். மாணவர்கள் உணர்வுக்கு மதிப்பு அளிக்காத அரசுகள் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media