அதிமுக அரசு மீது விஜயகாந்த் கண்டனம்!

October 25, 2016 10:42 am
அதிமுக அரசு மீது விஜயகாந்த் கண்டனம்!

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை குணமாகவேண்டி அதிமுக உறுப்பினர் பல்வேறு பிராத்தனைகளும், பூஜைகளும் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் முதலமைச்சருக்காக பால்குடம் எடுத்த கமலம்மாள் என்ற 60வயது பெண் நெரிசலில் சிக்கி நேற்று உயிரிழந்தார்.

இதற்க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், விளம்பரத்துக்காக மக்களைப் பகடைக் காய்களாக அதிமுக அரசு பயன்படுத்திவருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அதிமுக அரசு மூட நம்பிக்கை வளர்க்கும் கூடாரமாக செயல்படுவதாக விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media