ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் சபூர் ஜனார்தன் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சபூர் ஜார்தன், அவரது உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, அவரது காரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். பின் துப்பாக்கியால் சரமாரியாக தொடர்ந்து காரை நோக்கி சுட்டனர்.

இந்த தாக்குதலில் சபூர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media