அமெரிக்க அதிபர் டிரம்ப் – நடிகர் அர்னால்டு மோதல்

January 7, 2017 9:11 am
அமெரிக்க அதிபர் டிரம்ப் – நடிகர் அர்னால்டு மோதல்

நம் நாட்டில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் அவ்வப்போது வார்த்தை மோதல் வெடிப்பது போல், அமெரிக்காவிலும் வெடிப்பதுண்டு.

அதுவும் அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அவ்வப்போது எதையாவது சொல்லி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.

அப்படிப்பட்ட ஒரு டுவிட்டர் சர்ச்சைதான் தற்போது டிரம்ப் – அர்னால்டு இடையே உருவாகி ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறது.

அர்னால்டு பல ஹாலியுட் படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர். கலிபோர்னியா மாகாண ஆளுநராகவும் இருந்தவர்.

அதே போல் டொனால்ட் டிரம்ப், தொழில் அதிபராக இருந்ததுடன்,
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்து பிரபலமடைந்தவர்.

டிரம்ப் தொகுப்பாளராக இருந்து நடத்திய தி அப்ரண்டைஸ் என்ற நிகழ்ச்சியை தற்போது அர்னால்டு நடத்தி வருகிறார்.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு முன்னர் இருந்த ரேட்டிங் தற்போது இல்லை.
அதை கிண்டல் செய்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதற்கு பதில் அளித்துள்ள அர்னால்டு, டிரம்ப் தனது அதிபர் பொறுப்பில் கவனம் செலுத்துவது நல்லது என்று கூறியுள்ளார்.

முன்னாள் அதிபர் லிங்கன் கூறியதை கருத்தில் கொண்டு, அமெரிக்கர்கள் அனைவரையும் தமது நண்பர்களாகக் கருதவேண்டும் என்று அர்னால்டு குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media