இந்தியாவை வீழ்த்த புதிய திட்டம், 1.28 கி.கி., எடைகொண்ட பேட்டை பயன்படுத்தும் வார்னர்..,

இந்தியாவை வீழ்த்த புதிய திட்டம், 1.28 கி.கி., எடைகொண்ட பேட்டை பயன்படுத்தும் வார்னர்..,

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது.

இத்தொடருக்கு பின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் சாதிக்க ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஸ்பெஷல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இளம் கோலி தலைமையிலான இந்திய அணி, முன்னதாக இங்கிலாந்து அணிக்கு, எதிராக நடந்த டெஸ்ட் தொடரை 4-0 என கைப்பற்றியது. இதனால், அஸ்திரேலிய அணி, மிகவும் தீவிரமாக தயாராகி வருகிறது.

வீரர்கள் காயமடையக்கூடாது என்பதற்காக பிக் பாஷ் தொடரின் ஒப்பந்தத்தை கூட பாதியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, இந்திய ஆடுகளங்கள் எதிர்பார்த்ததைவிட, இந்திய சுழல் இரட்டையர்களான அஷ்வின், ரவிந்திர ஜடேஜாவுக்கு சாதகமாகவே கைகொடுத்தது.

இதனால், வழக்கமான பேட்டை பயன்படுத்துவதை விட, சற்று எடை கூடுதலான பேட்டை பயன்படுத்துவது அதிக பலன் அளிக்கும் என அனுபவ வீரர்கள் ஆலோசனை வழங்கியதால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர் இதை பின்பற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போதும் 1.23 கி.கி., எடைகொண்ட பேட்டை பயன்படுத்தும் வார்னர். இந்திய தொடருக்காக 1.28 கி.கி., எடைகொண்ட பேட்டை தயார் செய்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media