டி.ஷிவா தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் அடுத்த படம்!

டி.ஷிவா தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் அடுத்த படம்!

“சென்னை-28”  இரண்டாம் பாகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு டேரக்கஷனில் தயாராகும் அடுத்த படம்.

‘தெய்வ வாக்கு’ முதல் அடுத்து வெளிவர இருக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ வரை 19 படங்களை தயாரித்திருப்பவர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா. இவர் தயாரிக்கும் 20-வது படத்தை வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார்.

ஏற்கனவே, ‘சரோஜா’ படத்தில் இணைந்து பணிபுரிந்த டி.சிவா, வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இதுபற்றி டி.சிவா கூறியதாவது:-

“சென்னை-28 இரண்டாம் பாகம் படத்தின் வெற்றி எங்களை பெரும் மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. அடுத்து நாங்கள் உருவாக்கும் பெயர் சூட்டப்படாத புதிய படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்த படத்தின் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.”

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media