மார்ச் 31 – க்கு பிறகு பழைய 500 ,1000 வைத்திருந்தால் சிறை இல்லை!மத்திய அரசு புதிய அறிவிப்பு!

December 29, 2016 12:13 pm
மார்ச் 31 – க்கு பிறகு பழைய 500 ,1000 வைத்திருந்தால் சிறை இல்லை!மத்திய அரசு புதிய அறிவிப்பு!

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 ,1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31 ம் தேதி வரை மட்டுமே நம்மிடம் வைத்துக்கொள்ள முடியும் ,என்று மத்திய அரசு அறிவித்தது.

மார்ச் 31 ம் தேதிக்கு பிறகு பழைய நோட்டுகளை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த பழைய நோட்டுகளை பிற வங்கிகளில் மாற்றிக்கொள்ள டிசம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.இந்த காலா அவகாசம் நாளை முடிவடைகிறது.

ஆனால்,ரிசர்வ் வங்கியில் மார்ச் 31 ம் தேதி வரை பழைய ரூபாய்நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.ஆனால்,இதுவரை எந்த காரணத்தால் பழைய ரூபாய் நோட்டுகளை மற்ற வில்லை, அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

மார்ச் 31 க்கு பிறகும் பழைய நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

மார்ச் 31 க்கு பிறகு பழைய ரூ.500 ,1000 நோட்டுகளை கையில் வைத்திருந்தால் சிறை இல்லை.பழைய ரூ.500 ,1000 நோட்டுகளை வைத்திருந்தால் ரூ.10 ,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media