ஓ.பி.எஸ்-ஐ எடப்பாடி கட்சியிலிருந்து விரட்ட இது தான் காரணமா.? மூத்த நிர்வாகி பகீர்.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக அதிமுக தலைமை பிரச்சனை தலை தூக்கி வரும் நிலையில், முன்னாள் அதிமுக நிர்வாகியான கே.சி.பழனிசாமி சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேட்டி அளித்துள்ளார். 

அவர் அந்த சேனலில் பேசிய போது, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலகட்டத்தில் ஊழலுக்கு அப்பாற்பட்டு அதிமுக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடிக்கு ஜால்ரா கொடுக்கும் அனைவருமே ஊழல்வாதிகள். 

என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.! உருவாகியது அதிமுக தொண்டர் அணி.!!  செய்வதறியாது ஓபிஎஸ்-இபிஎஸ்.!! - Seithipunal

இவர்கள் வந்த பின்னர் தான் ஊழல் அதிகமானது. அம்மா இருந்தபோது ஊழல்கள் நடந்தாலும் கூட அதை தாண்டி வெற்றி பெறும் அளவிற்கு கட்சியை வைத்திருந்தார். எடப்பாடி மீது இன்னும் நிறைய குற்றங்கள் இருக்கின்றன. கோடநாடு விவகாரம், ஹைவேஸ் உள்ளிட்டவை இன்னும் தீர்ந்தபாடில்லை.

எனவே இந்த ஊழல், லஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தலைமை தான் அதிமுகவுக்கு வேண்டும். அப்படிப்பட்டவர்களை தொண்டர்கள் வரவேற்பார்கள். எடப்பாடி பழனிசாமி சமீபத்தில், 'மடியில் கனமில்லை வழியில் பயமில்லை' என்று கூறுகிறார். அதற்கு ஸ்டாலின், 'உங்கள் மடியில் கனம் இருக்கு' என்பதை கூறி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் மௌனம் காக்கிறார். 

'கொடநாடு விஷயத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்பேன், கலைஞரின் மகன்' என்றெல்லாம் கூறிய ஸ்டாலின் அமைதியாக இருக்கிறார். ஏனென்றால், எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் சேர்ந்து அரசியல் செய்கின்றனர். 

அதிமுகவை ஒன்றிணைக்க இறங்கிய முக்கிய புள்ளி.! வெளியான அறிவிப்பு.!! -  Seithipunal

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கட்சியிலிருந்து விரட்டிவிட்டு அதிமுகவின் வாக்குகளை பிரித்து திமுகவின் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக உதவுகிறாரோ என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்துகின்றன. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. 

'கட்சி தனக்கு வர வேண்டும். சம்பாதித்த பணத்தை எல்லாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். போலீஸ் கைதுக்கு ஆளாகி விடக்கூடாது.' என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் குறிக்கோளாக இருக்கிறது. 

விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி மீது ஊழல் லஞ்ச குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு ரெய்டு நடக்கிறது. இப்படிப்பட்ட ஊழல் நடவடிக்கைகளை திமுக எடுத்தால் ஊழலற்ற கட்சி என்ற அடையாளத்தை திமுக பெற்றுவிடலாம் என்று ஸ்டாலின் முனைப்புடன் செயல்படுகிறார். 

Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal

எங்களது காலகட்டத்தில் திமுக தான் ஊழல் கட்சி என்றும், கலைஞரின் ஆட்சி ஊழலாட்சி என்றும் குறிப்பிடுவோம். ஆனால், நிலைமை இப்போது தலைகீழாக இருக்கிறது. எனவே, ஊழல் செய்யும் நபர்களை அதிமுகவிலிருந்து களைய வேண்டும். இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்து ஓபிஎஸ் மிகுந்த மகிழ்ச்சி கடலில் மூழ்கி இருப்பார்." என்று தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவதாகவும், கட்சியில் ஓ.பி.எஸ்-ஐ நீக்கி அதிமுகவை பிளவுபடுத்தி வாக்குகளை பிரிப்பதாகவும் கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk senior blames edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->