எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். தற்போது சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 66 ஆக உள்ளது.

அதில் சட்டப்பேரவை உறுப்பினர்களான ஓபிஎஸ்,வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எதிரணியாக இருந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த மூன்று பேரை தவிர்த்து 63 பேர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLAs meeting under the leadership of Edappadi Palaniswami today


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->